அனைவரும் சுதந்திரத்தை அனுபவிக்கும் தருணத்தில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது : ஜனாதிபதி
அனைவரும் சுதந்திரத்தை அனுபவிக்கும் சந்தர்ப்பத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். நாடு பாரிய அபிவிருத்தியை நோக்கி முன் நகர்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் மனதில் புதிய எதிர்பார்ப்புக்களை விதைத்து அனைவருக்கும் சௌபாக்கியத்தை ஏற்படுத்தும் ஓர் ஆண்டாக இந்த புத்தாண்டு அமைய வேண்டுமென ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். வரலாற்றுக் காலம் முதலே தமிழ் சிங்களப் புத்தாண்டு ஓர் கலாச்சார நிகழ்வாக கொண்டாடப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சூரியனுக்கு நன்றி பாராட்டும் அறுவடைத் திருவிழாவாக கிராம மக்கள் புத்தாண்டைக் கொண்டாடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல நூற்றாண்டு காலமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவதாகவும் எதிர்கால சந்ததியினரும் புத்தாண்டை கலாச்சாரத்தை அறிந்து கொள்ளக் கூடிய வகையில் கொண்டாட்டங்கள் அமைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். புத்தாண்டு காலத்தில் நாட்டுக்காக சேவையாற்றி வரும் முப்படையினர், காவல்துறையினர் மற்றும் அரச ஊழியர்களின் கடமை உணர்வை தாம் வியந்து பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply