நாட்டில் எழுச்சிகரமான மாற்றம் ஏற்படுத்த இந்த புத்தாண்டு வழிகோலட்டும் : ரணில்

நாட்டில் எழுச்சிகரமான மாற்றம் ஏற்படுத்த இந்த சித்திரைப் புத்தாண்டு வழிகோலட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மக்கள் எதிர்நோக்கி வரும் இன்னல்களுக்கு தீர்வு காணக் கூடிய ஓர் ஆண்டாக மலரும் இந்த புத்தாண்டு அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் இம்முறை புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் சம்பள உயர்வை வழங்கத் தவறியுள்ளதாகவும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் இன்னமும் முகாம்களில் தங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிவாரணங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் இம்முறை புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவதாக அவர் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply