இலங்கை கடலில் அணுக்கசிவு? ஆய்வு நடத்த விசேட குழு
ஜப்பான் புகுசிமா அணு உலையில் ஏற்பட்ட அணுக்கசிவு இலங்கையை சூழவுள்ள கடல் நீரில் கலந்துள்ளதா என்பது குறித்து இலங்கை அணு சக்தி அதிகார சபை ஆய்வு நடத்தி வருவதாக அதன் தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரம நேற்றுக் கூறினார்.இதற்காக கிழக்கில் இருந்து தென்பகுதி வரையான கடற்பகுதியில் இருந்து கடல் நீர் மாதிரிகள் பெறப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சமுத்திர மாசு தடுப்பு தொடர்பான அதிகார சபை, கடற்படையின் உதவியுடன் கடல் நீர் மாதிரிகளை பெற்று வருகிறது. இதுவரை 6 இடங்களில் இருந்து கடல் நீர் மாதிரிகள் கிடைத்துள்ளதாக கூறிய பேராசிரியர் அபேவிக்ரம அவற்றை பரிசோதித்து வருவதாக கூறினார்.
கடல் நீரில் அணுக்கசிவு கலந்துள்ளதா என்பது குறித்து மக்கள் அஞ்சத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply