டைம்ஸ் பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷ் 4ம் இடத்திற்கு முன்னேற்றம்

உலகிலுள்ள மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேரை உலகின் அதிக பிரபலம் பெற்று விளங்கும் டைம் சஞ்சிகையின் வாசகர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
 
அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், புத்தமைவாளர்கள், மதத்தலைவர்கள், சான்றோர் மற்றும் நீங்கள் விரும்பும் வீரமிக்கவர் போன்றவர்கள் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்களாக விளங்குகிறார்கள்.
 
அவர்களில் முன்னணியில் உள்ள நூறு பேரை தெரிவு செய்யும் பொறுப்பை டைம் சஞ்சிகை உலகெங்கிலும் பரந்திருக்கும் தனது இலட்சக் கணக்கான வாசகர்களிடம் விட்டிருந்தது.
 
வாசகர்கள் அளித்த வாக்குகளின் படியே இந்த செல்வாக்கு மிக்க முக்கியஸ்தர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் 1,46,212 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
 
இதேவேளை 46 இடத்தில் இருந்த பராக் ஒபாமா அதே இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் அதேவேளை 95 ஆம் இடத்தில் இருந்த சோனியா காந்தி 100 ஆவது இடத்துக்கு பின் தள்ளப்பட்டு இறுதி விளிம்பில் உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply