பிரிமா கோதுமை மா விலை உயர்வு
பிரிமா நிறுவனம் கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலையை 4 ரூபா 10 சதத்தால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பிரிமா கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்தார்.
பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையிலும் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் ஏற்படுமென இதற்கு முன்னர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்திருந்தார்.
அத்துடன் செரண்டிப் நிறுவனம் மூன்று ரூபாவால் கோதுமை மாவின் விலையை உயர்த்தியுள்ள போதும் அதனால் பேக்கரி உற்பத்திப் பொருட்கள் அதிகரிக்கப்பட மாட்டாதென அவர் கூறியிருந்தார்.
எனினும் எரிபொருள் விலை அதிகரிப்பை காட்டி பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டி ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருந்த போதும் பிரிமா நிறுவனம் விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதால் பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளிலும் அதிகரிப்பை மேற்கொள்வது தொடர்பில் நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சருடன் இன்று கலந்துரையாடவுள்ளதாகவும் பின்னர் இறுதி முடிவை அறிவிப்பதாகவும் என்.கே.ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply