இலங்கைக்கான உதவியை இரட்டிப்பாக்க உலகவங்கி முடிவு
இலங்கைக்கு வழங்கி வரும் உதவித் தொகையை அடுத்த வருடம் இரட்டிப்பாக்குவதற்கு உலக வங்கி முன்வந்துள்ளது. சர்வதேச நிதி ஒத்துழைப்பு சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம, உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி ஒக்கொன்ஜோ இவெலாவை வொஷிங்டனில் சந்தித்தபோதே இது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு உலக வங்கி தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், உலக வங்கியின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
பொருளாதார ரீதியில் நாடு முன்னேறிச் செல்வதற்கான திட்டங்களுக்கு உலக வங்கி தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் எனக் குறிப்பிட்ட ஒக்கொன்ஜோ, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் தலா வருமானத்தை அதிகரிக்கும் இலங்கை அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டத்துக்கு உலக வங்கி ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அமைச்சர் சரத் அமுனுகமவிடம் தெரிவித்துள்ளார்.
நடுத்தர வருமானங்களைக் கொண்ட நாடுகளின் அபிவிருத்திக்கு உலக வங்கி உதவிவருகிறது எனக் குறிப்பிட்ட அவர், இதேபோன்று இலங்கைக்கும் உதவிகளை வழங்கும் என்றும் கூறியுள்ளார்.
இலங்கை பொருளாதார ரீதியில் துரித அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்பதை ஏற்றுக்கொண்டிருக்கும் உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர், புனர்நிர்மாண மற்றும் அபிவிருத்திக்கான வங்கியிலிருந்து நிதி உதவிகளைப் பெறுவதற்கான தகுதி யைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் தற்பொழுது முன்னெடுக்கப் பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளைப் பாராட்டியிருக்கும் உலக வங்கியின் முகா மைத்துவப் பணிப்பாளர் ஒக்கொன்ஜோ இவெலா, அபிவிருத்திகள் மற்றும் திறன் களை இலங்கை ஏனைய தெற்காசிய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதையே உலக வங்கி எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சரத் அமுனுகமவிடம் கூறி யுள்ளார்.
சர்வதேச நிதி ஒத்துழைப்பு சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகமவுடன், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய, மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டி.டி.தீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பீ.என்.வீரசிங்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply