நிச்சயம் நாடு திரும்புவேன்: அதிபர் முஷாரப் உறுதி
தலிபான்கள் மற்றும் பிற பயங்கரவாதிகளிடம் இருந்து என் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தாலும், நான் நிச்சயம் பாகிஸ்தானுக்குத் திரும்புவேன்,” என, பாக்., முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் லாகூர் நகரில், முஷாரப்பின் அனைத்து பாக்., முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்தில், வீடியோ மூலம் தன் தொண்டர்களிடம் முஷாரப் பேசியதாவது: நான் பலமுறை கொலை முயற்சிகளுக்கு ஆளாகியிருக்கிறேன்.
எந்த சம்பவத்தையும் எதிர்கொள்ள நான் தயாராகவே உள்ளேன். யாராலும் எனக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. கடவுளைத் தவிர நான் யாருக்கும் பயப்படவில்லை. நான் பாகிஸ்தானுக்கு வந்தால், என் உயிருக்கு தலிபான்கள் மற்றும் பிற பயங்கரவாதிகளால் ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதுபோன்ற பல தாக்குதல்களை நான் சந்தித்திருக்கிறேன். நிச்சயம் பாகிஸ்தான் திரும்புவேன். யாரும் என்னைத் தடுக்க முடியாது. என் நாட்டு மக்களுக்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும் என முடிவெடுத்திருக்கிறேன். இவ்வாறு முஷாரப் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply