புக்குஷிமா அணுமின் நிலையத்தில் கடுமையான கதிர்வீச்சு

ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தில் சேதம் அடைந்த அணுஉலை கட்டடங்களுக்குள் இரண்டு ரோபோக்கள் அனுப்பப்பட்டன. அதில், இரண்டு அணு உலைகளிலும், மனிதர்கள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு கடுமையான கதிர்வீச்சு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கிடையில், புதிய அணுமின் நிலையத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக, பிரதமர் நவோட்டோ கான் அறிவித்துள்ளார்.

புக்குஷிமா டாய் இச்சிஅணுமின் நிலையத்தின் ஒன்று மற்றும் 3ம் உலைகளில், அதிகளவு கதிர்வீச்சு வெளியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதனால், மனிதர்களை உள்ளே அனுப்ப முடியவில்லை. அதற்குப் பதிலாக, நேற்று முன்தினம் இரண்டு ரோபோக்கள் அனுப்பப்பட்டன. அவற்றில் இருந்து எடுக்கப்பட்ட பதிவுகளில் இருந்து, உள்ளே கதிர்வீச்சு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. எனினும், “நான்கு உலைகளையும் மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வரும் திட்டத்திற்கு இந்த அதிகளவு கதிர்வீச்சு தடையாக இருக்காது. நாளடைவில் கதிர்வீச்சின் அளவு குறைந்து விடும்’ என, “டெப்கோ’ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ஜப்பான் பிரதமர் நவோட்டோ கான், “”கதிர்வீச்சு பேரிடர் குறித்த முழு விவரங்கள் கிடைக்கும் வரையிலும், புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட மாட்டாது. அதேபோல், ஜப்பானின் அணுசக்திக் கொள்கையும் மறுபரிசீலனை செய்யப்படும்,” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply