ரஷ்யா, சீனா ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கெதிராக முன்வர வேண்டும்: விமல்

இலங்கைக்கு எதிரான ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் முன்வர வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா.வில் செல்வாக்குச் செலுத்தும் மேற்கு நாடுகளின் ஆதிக்கத்தை தடுக்க ரஷ்யா, சீனாவும் முன்வர வேண்டும் என்றும் உலக அமைதியை நிலைநாட்ட ஐ.நா. அமைப்பு தவறிவிட்டது என்றும் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை இராணுவத்தினரை நிறுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் போராட்டங்களை நடத்துவோம் என்றும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply