இந்திய மீனவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படக் கூடாது : நிருபமா ராவ்
இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டமை துரதிஸ்டவசமானது என இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய மீனவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது குறித்து புதுடெல்லிக்கு அறிவிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.எந்தவொரு சூழ்நிலையிலும் மீனவர்களுக்கு எதிராக வன்முறைப் பயன்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் லெகான் மெரோட்ராவினால் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நான்கு இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் கொல்லப்பட்டமை துரதிஸ்டவசமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மீனவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்பது தொடர்பில் இதுவரையில் சரியான தகவல்கள் வெளியடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply