இலங்கை மீதான போர் குற்றங்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்க என்னால் மாத்திரமே முடியும்: பொன்சேகா

இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்களில்  இருந்து இலங்கையை பாதுகாக்க போருக்கு கட்டளை வழங்கிய தளபதி என்ற முறையில் தன்னால் மாத்திரமே முடியும் எனவும்  மக்கள் விரைவில் காட்போர்ட் வீரர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள் எனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடி விவகார வழக்கு  இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதில் ஆஜர்ப்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட போதே சரத் பொன்சேக்கா இதனை குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்திற்கு தானே கட்டளைகளை வழங்கியதாகவும், இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்களில் இருந்து தன்னால் மாத்திரமே நாட்டை பாதுகாக்க முடியும் எனவும் சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார். வெள்ளைக்கொடி விவகார வழக்கு வாக்குமூலம் வழங்குவதை சரத் பொன்சேக்கா மீளாய்வு செய்ய தீர்மானித்துள்ளார்:- 

வெள்ளைக்கொடி விவகார வழக்கு சம்பந்தமாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா, குற்றம்சுமத்தப்பட்ட தரப்பின் சார்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவது தொடர்பில்  மீண்டும் ஆராய தீர்மானித்துள்ளதாக அவரது சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உள்நாடு மற்றும் வெளி நாட்டில் ஏற்பட்டுள் சில சம்பவங்கள் காரணமாக வாக்குமூலம் வழங்குவதை சரத் பொன்சேக்கா மீளாய்வு செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளைக் கொடி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

குற்றம்சுமத்தப்பட்ட தரப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அரசாங்கத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எதிர்தரப்பு சட்டத்தரணியின் கோரிக்கைக்கு எதிர்ப்பை வெளியிடவில்லை. இந்த நிலையில் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 4 ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.  வெள்ளைக்கொடி விவகார வழக்கு மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் ட்ரயல் அட்பார் முறையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply