ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கு சகலருக்கும் தைரியம் கிட்டட்டும்: ஜனாதிபதி
உலகளாவிய ரீதியில் பரந்து வாழ்கின்ற கத்தோலிக்க மக்களால் அனுஷ்டிக்கப்படுகின்ற இன்றைய பெரிய வெள்ளியில் ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கு சகலருக்கும் தைரியம் கிடைக்கவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக கிறிஸ்தவர்களால் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற பெரியவெள்ளியை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மரணமடைந்ததன் பின்னர் அவர் இந்த காலத்திலேயே மரணத்தை வெற்றிக்கொண்டார். அதற்காக கத்தோலிக்க மக்கள் 40 நாட்கள் விரதமிருந்து அவர்களின் சாஸ்திரங்களின் பிரகாரம் வழிபாடுகளில் ஈடுபட்டனர். தங்களுடைய இதயத்திலிருந்து வெளியாகும் கருத்துக்களின் பிரகாரம் அந்த சந்தர்ப்பத்தில் நல்ல மனிதர்களை சமூகத்தில் உருவாக்குவதற்கு நல்ல பல கருத்துக்களை மக்களிடத்தில் விதித்தார்.
இன்று நாட்டில் சகல பிரஜைகளுக்கும் சுதந்திரம் கிடைத்துள்ளது. சுற்றாடல் மிகவும் அமைதியாக இருக்கிறது.நாடு ஐக்கியப்பட்டு அந்த சுதந்திரமாக சமாதானமாக அதனை பாதுகாப்பதே எங்களுடைய ஒரே நோக்கமாகும். பொருளாதாரம் மட்டுமன்றி தர்மததுடன் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு நாங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நாங்கள் அனைவரும் இணைந்து இன்னும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்பதே எனது கருத்தாக இருக்கிறது.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை எங்களுடைய வாழ்க்கையிலும் சமூகத்திலும் முன்மாதிரியாக கொள்ளவேண்டும், ஐக்கிய இலங்கையில் ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதே எங்களுடைய நோக்கமாகும் அந்த நோக்கத்தை பலப்படுத்தி இந்த தவக்காலத்தில் ஐக்கியத்தை கடைப்பிடிப்பதற்காக பிராத்திப்போம். அதற்காக சகலருக்கும் பலம் மற்றும் தைரியம் கிடைக்கவேண்டும் என பிரார்த்திப்போம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply