நிபுணர் குழு அறிக்கையை இலங்கை, இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை இலங்கை அரசாங்கம், இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.இந்த அறிக்கை தொடர்பில் இந்தியாவிடம் ஆலோசனைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இலங்கை அரசாங்கம் இந்த அறிக்கையை அனுப்பி வைத்துள்ளது.இதேவேளை, நிபுணர் ஆறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்புச ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினை இந்திய அரசாங்கம் நியமித்துள்ளதாக ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் இந்த அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பில் தொலைபேசி மூலம் இரு நாட்டுத் தலைவர்களும் பேசியதாகவும், அதன் பின்னர் இந்தியா, ஷிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழுவினை நியமித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
அறிக்கையை உன்னிப்பதாக ஆராயப்பட்டதன் பின்னர் தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய இராஜதந்திரியொருவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 12ம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இந்த நிபுணர் குழு அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட போதிலும், இதுவரையில் பகிரங்கப்படுத்தவில்லை.
எனினும், அறிக்கையின் தகவல்கள் ஊடகங்களுக்கு கசியப்பட்டமை தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை எதிர்வரும் வாரத்தில் பகிரங்கப்படுத்தப்பட உள்ளதாகவும், இதனை வெளியிட வேண்டாம் என இலங்கை அரசாங்கம் கோரி வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply