இராஜினாமா செய்யத் தயாரென சஜித் பிரேமதாச அறிவிப்பு
தேசிய அமைப்பாளர் நியமனத்தை செய்வதற்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தடையாக இருக்கிறாரென சஜித் பிரேமதாச எம்.பி.யைச் சார்ந்த அணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். தனது அணியைச் சேர்ந்த எவருக்கும் நியமனம் வழங்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க நேரடியாகத் தடையை ஏற்படுத்தி வருகிறாரென சஜித் அணியினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில் மெளனம் சாதித்துவரும் ரணில் விக்கிரமசிங்க சத்தமில்லாமல் குழிபறிக்கிறாரென சஜித் பிரேமதாச குற்றம்சாட்டுகிறார்.
கட்சியின் தேசிய அமைப்பாளர் நியமனம் இன்னும் இடம்பெறாததால் கட்சிக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு ஆதரவு வழங்கும் கட்சி எம்.பிக்களுக்கு தொடர்ந்தும் நெருக்கடி கொடுப்பாராயின் தனது பதவியை இராஜினாமா செய்யவும் தான் தயாரென கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தேசிய அமைப்பாளர் பதவிக்கான தெரிவு நடைபெறும்போது தனது ஆதரவாளர்களுக்கு கட்சித் தலைவர் நெருக்கடி கொடுத்துள்ளாரெனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக கருத்துத்தெரிவித்த அவர்,
“நான் பிரதித் தலைவர் பதவிக்காக ஆசைப்படவில்லை. எனது ஆதரவாளர்களான கட்சி எம்.பி.க்கள், கட்சித் தலைவரினால் நெருக்கடிக்குள்ளாகும்போது எனக்கு மட்டும் இந்த பதவி தேவையில்லை. பதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எனது ஆதரவாளர்களின் ஒத்துழைப்புடன் கட்சியின் சிறந்த எதிர்காலத்துக்காக தொடர்ந்தும் அயராது பாடுபடுவேன். இதில் நான் உறுதியாகவிருக்கிறேன்.”
கட்சியின் முன்னேற்றத்திற்காக அனைவருடனும் ஒத்துழைத்து செயற்படவே நான் விரும்புகிறேன். அதேசமயம் தொடர்ந்தும் நெருக்கடி வழங்கும் சந்தர்ப்பத்தில் நான் அக்கறையின்றி இருக்கப்போவதுமில்லை. என்னால் இயன்றதையும் செய்து காட்டுவேன் எனக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply