ஐ.நாவின் நடவடிக்கைகள் பயங்கரவாத அமைப்புக்களுக்கு உந்து சக்தியாக அமையக் கூடும் : சம்பிக்க
ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் பயங்கரவாத அமைப்புக்களுக்கு உந்து சக்தியாக அமையக் கூடுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் பாடலீ சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அல் கய்தா போன்ற தீவிரத அமைப்புக்களுக்கு மறைமுக ஆதரவினை வழங்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பலம்பொருந்திய நாடுகளின் ஒத்துழைப்பின்றி, மிகவும் கொடிய பயங்கரவாத அமைப்பொன்றை யுத்த ரீதியாக தோற்கடித்த ஒரே நாடாக இலங்கை திகழ்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனநாயக ரீதியில் ஆட்சிப் பொறுப்பை பெற்றுக் கொண்ட இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியும் என்பதனை உலகிற்கு எடுத்துரைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சில தீவிரவாத அமைப்புக்களின் நடவடிக்கைகள் பின்னடைவை எதிர்நோக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பல்வேறு நடவடிக்கைகளை உலகின் ஏனைய தீவிரவாத அமைப்புக்கள் பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் உலகின் ஏனைய நாடுகளின் பயங்கரவாத இல்லாதொழிப்பு குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply