இலங்கையின் கோரிக்கைகளுக்கு அப்பால் ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை இன்று வெளியாகும்

இலங்கை மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் ஐ.நா. வின் அறிக்கையை வெளியிடுவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில் ஓர் முறுகல் நிலை தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறித்த ஐ.நா.வின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட மாட்டாது என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ. மூனிடம் உத்தரவாதம் ஒன்றை பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை ஐக்கிய நாடுகள் சபை தனது உறுதி மொழியை மீறாது என தான் எண்ணுவதாகவும் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். மேற்படி கோரிக்கையை அமைச்சர் பீரிஸ் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ. மூனிடம் விடுத்துள்ளமையை நியூயோர்க்கிலும் கொழும்பிலும் உள்ள ஐ.நா. அலுவலகங்கள் உறுதி செய்துள்ளன. எனினும் பான் கீ. மூன் அவரிடம் அது தொடர்பில் எந்தவொரு பிரதிபலிப்பையும் வெளிக்காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அவ்வாறானதோர் உறுதிமொழி வழங்கப்படவில்லை என நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வறிக்கை தொடர்பில் இலங்கையில் உள்ள ஐ.நா. தூதரக வட்டாரங்கள் கருத்து வெளியிடுகையில் இந்த அறிக்கையானது உணர்வுபூர்வமான அதேவேளை அது தொடர்பில் கருத்துக்கூறும் ஆணை தமக்கு இல்லையென தெரிவித்துள்ளன.

இதேவேளை இந்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என ஐ.நா. வின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் லின் பஸ்கோவிடம் அமைச்சர் பீரிஸ் கடந்தவாரம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.

இரண்டு காரணங்களின் அடிப்படையிலேயே அமைச்சர் பீரிஸ் இந்த கோரிக்கையை விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதாவது இந்த அறிக்கையானது கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவுக்கு ஒரு தகவல் மூலமாக பயன்படுத்தப்படலாம் அல்லது தமிழ் மக்களுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் நல்லிணக்கப்பாடுகளுக்கு பகிரங்கமாக இதனை வெளியிடுவது பாதகமாக அமையலாம் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

எவ்வாறெனினும் ஐ.நா. பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் இந்த கோரிக்கையை நிராகரித்ததுடன் எந்தவிதமான திருத்தங்களும் செய்யப்படாமல் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மொஸ்கோவுக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ. மூன் நியூயோர்க்குக்கு திரும்பியவுடன் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. 196 பக்கங்கள் அடங்கிய ஐ.நா. குழுவின் அறிக்கை ஏப்ரல் 12 ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ. மூனிடம் கையளிக்கப்பட்டது.

நிபுணர் குழுவின் தலைவராக விளங்கிய மர்சுகி தருஷ்மன் இதனை அவரிடம் கையளித்திருந்தார். இந்த அறிக்கையை வெளியிட்டவுடன் மனித உரிமைகளுக்கõன ஐ.நா. விசேட அறிக்கையாளர் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரõன அமைப்பினரும் என்பன அறிக்கைகளை வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் மரணித்த பொது மக்கள் மற்றும் காயங்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பிலான உத்தியோகபூர்வ தொகை கிடையõது உன ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் சில நம்பகத் தகுந்த மூலங்களின் அடிப்படையில் சுமார் 40 ஆயிரம் சிவிலியன்கள் மரணத்திருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளன.

இது இவ்வாறு இருக்க அரசாங்கம் எந்தவொரு சிவிலியன் இறப்பும் இடம்பெறவில்லை என மறுத்துவருகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply