குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் : பிரித்தானியா
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் நிலையான சமாதானம் ஏற்பட வேண்டுமாயின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சரியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை பதிலளிக்க வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.
நிபுணர் குழு அறிக்கை சுயாதீனமானதுமான விசாரணைகளை வலியுறுத்தி நிற்பதாகத் தெரிவித்துள்ளது.
குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச் சார்பற்ற சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையி;ல் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு பிரித்தானியா பூரண ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
நிபுணர் குழுவினால் சுமத்தப்பட்டுள்ள பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply