ஒரு மில்லியன் மக்கள் குழுமிய இளவரசர் வில்லியம் : கதே திருமணம்

பிரித்தானிய அரச குடும்பத்தாரும், உலக பிரபலங்களும் புடைசூழ இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கதே மிடில்டனை நேற்றுக் கரம்பிடித்தார்.உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த இங்கிலாந்து இளவரசர் வில்லியம் (28), கதே (29) திருமணம் நேற்று வெகு கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.இந்தத் திருமணம் புகழ்பெற்ற வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடந்தது. முதலில் மணமகன் வில்லியம் வந்திறங்கினார். அடுத்து அவரது தந்தை சார்ல்சும், கெமிலாவும் வந்தனர். பின்னர் ராணி எலிசபெத் தனது கணவர் பிலிப்புடன் வந்தார்.

பிரித்தானிய நேரம் 11 மணிக்கு தேவாலயத்தில் அழகாக வந்திறங்கினார் மணமகள் கேட். மணமகளைப் பார்த்தவுடன் வழியிலிருந்தவர்களும், வீதியின் இரு மருங்கிலும் நின்ற மக்களும் மகிழ்ச்சியில் கரகோஷங்களை எழுப்பி மணமகளை வரவேற்றனர். இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்த கேட், வீதியின் இரு மருங்கிலுமிருந்த மக்களுக்கு கையசைத்தவாறே வந்தார்.

பின்னர் வில்லியம், கேட் திருமணம் புராடஸ்டன்ட் முறைப்படி நடைபெற்றது. மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டு புதிய பந்தத்தில் இணைந்தனர். இந்த நூற்றாண்டின் பிரபலமான திருமணமாக இது கருதப்படுகிறது.

திருமணத்தை முன்னிட்டு லண்டன் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. திருமணத்தின் போது கேட் மிடில்டன் அணிவதற்காக நீலக்கல் பதிக்கப்பட்ட கொண்டை ஊசியை இலங்கை சார்பில் இலங்கை இரத்தினக்கல் கூட்டுத்தாபனம் பரிசாக வழங்கியிருந்தது.

முன்னதாக 1981ஆம் ஆண்டில் டயானாவின் திருமணத்தின் போது இலங்கை அரசு அவருக்கு நீலக்கல் மோதிரத்தை அளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply