இலங்கை உயரதிகாரிகள் கைது செய்யப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது : விஜயதாச ராஜபக்ஷ
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையின் காரணமாக இலங்கையின் உயரதிகாரிகளை கைது செய்யக் கூடிய அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் இலங்கையின் முக்கிய பிரமுகளை கைது செய்வதற்கு தேவையான பிடிவிராந்தினைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேவையானவர்கள் ஐக்கிய நாடுகள் நிபுணர் அறிக்கையை ஆதாரம் காட்டி இவ்வாறு பிடிவிராந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு விஜயங்களை மேற்கொள்ளும் இலங்கைத் தலைவர்களை கைது செய்ய முடியும் என சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகள் பலர் அமெரிக்கக் குடியுரிமை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்படக் கூடிய அபாயம் காணப்பட்ட போதிலும், இராஜதந்திர ரீதியில் சம்பந்தப்பட்ட நாடு இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியும் என விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு உருவாக்கமே சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் எழுத்து மூல கோரிக்கை இன்றி இலங்கைக்கு எதிராக விசாரணைகளை நடாத்தும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் இலங்கைக்கு எதிராக விசாரணைகளை நடத்தக் கூடிய சாத்தியம் கிடையாது ன அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply