தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் தொடரும் : வாசுதேவ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணும் நோக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர் அறிக்கையின் மூலம் பேச்சுவார்த்தைகளுக்கு குந்தகம் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார். நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்திய போதிலும், அதனை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply