பாதுகாப்பு பேரவை நாடுகளுக்கு ஜனாதிபதி தனிப்பட்ட ரீதியில் விளக்கமளிக்கவுள்ளார் ?
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை உறுப்பு நாடுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட ரீதியில் விளக்கமளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில், பாதுகாப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளுக்கும் ஜனாதிபதி தனிப்பட்ட ரீதியில் எழுத்து மூலம் விளக்கமளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிபுணர் குழு அறிக்கை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி விளக்கவுள்ளார்.
வீட்டோ அதிகாரமுடைய ஐந்து நாடுகளிற்கும் ஜனாதிபதி விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளின் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை மற்றும் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக மற்றுமொரு கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்களை முறியடிக்கும் நோக்கில் ஜனாதிபதி பிரச்சாரங்களை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply