லிபியாவில் நேட்டோ படைகள் கடும் தாக்குதல்: கடாபியின் இளையன் மகன், 3 பேரக்குழந்தைகள் பலி

லிபியாவின் மீது நேட்டோ படைகள் நடத்திவரும் விமானத்தாக்குதலில் அந்நாட்டு ஜனாதிபதி கடாபியின் இளையமகனான சயிப் அல் அராப் கடாபி மற்றும் கடாபியின் பேரக்குழந்தைகள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை அந்நாட்டு அரசின் செய்தி தொடர்பாளர் மூஸா இப்ராஹிம் உறுதி செய்துள்ளார்.

இதேவேளை கடாயின் இளையமகன் கொல்லப்பட்டது குறித்து நேட்டோ படைகள் உறுதியான தகவல்கள் தெரிவிக்கவில்லை. திரிபோலி நகரில் வசித்து வந்த கடாபியின் இளையமகனின் வீட்டை நேட்டோ படைகள் தாக்கியபோது கடாபியும் அவரது மனைவியும் அங்கேயே இருந்துள்ளனர்.

எனினும் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடாபியின் இளையமகனான சயிப் அல் அராப் கடாபி (29) ஜேர்மனியில் கல்விகற்றவர் என்பது குறிபிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply