அரசு – கூட்டமைப்பு பேச்சுக்குழு புதிய தலைவராக ரஜீவ்
அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் இடம்பெறும் பேச்சுவாத்தைக்கென அமைக்கப்பட்டுள்ள குழுவின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ் விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுவின் தலைவராக கடமையாற்றிய ரட்ணசிறி விக்ரமநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து அப்பதவிக்கு புதியவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதென தமிழத் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அத தெரண தமிழ் இணையத்திற்குத் தெரிவித்தார்.
ரட்ணசிறி விக்ரமநாயக்க பதவி விலகியமை அரச தரப்புடனான பேச்சுவார்த்தைக்கு இடையூறாக அமையாதெனவும் அவர் தெரிவித்தார்.
ஐநா நிபுணர் குழு அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளதால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் தயார் இல்லை எனத் தெரிவித்து சிரேஸ்ட அமைச்சர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply