ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக இன்று சத்தியாக்கிரகம்
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை எதிர்த்து ஜாதிக ஹெல உறுமய இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தவுள்ளது. “இடை நிறுத்தாது தொடர்வோம்” என இச் சத்தியாக்கிரகத்திற்கு ஹெல உறுமய பெயரிட்டுள்ளது. இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமய விடுத்துள்ள விசேட செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேற்கத்தைய கொலைக்கார கூட்டத்தினரின் மாயையில் சிக்கிக் கொண்டுள்ளார் பான் கீ மூன். இதன் காரணமாகவே இலங்கைக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த பொய்யான அறிக்கையை சத்தியத்தாலும் தர்மத்தாலும் தோல்வியடையச் செய்வதற்காகவே 2600 ஆம் ஆண்டு சம்புத்த ஜயந்திக்கு தயாராகும் நாம் பான் கீ மூனின் மூர்க்கத்தனமான அறிக்கைக்கு எதிராக தர்மத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து இன்றைய சத்தியாக் கிரகத்தை நடத்துகின்றோம்.
இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள அகில இலங்கை பௌத்த மகா சம்ளேனத்திற்கருகிலிருந்து சுதந்திர சதுக்கத்திற்கு நடைபவனியாக சென்று அங்கு சத்தியாக்கிரகம் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் பௌத்த குருமார் உட்பட பெரும்பாலானோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply