முக்கியத்துவம் வாய்ந்த சாதனை: ஜார்ஜ் புஷ் மனந்திறந்து புகழாரம்
பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் சுட்டு கொல்லப்பட்டது மிகவும்.முக்கியத்துவம் வாய்ந்த சாதனை,” என, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக, கடந்த 2001ல், ஜார்ஜ் புஷ் இருந்த போது, நியூயார்க் இரட்டை கோபுரத்தின் மீது, ஒசாமா பின்லாடன் தலைமையிலான அல்-குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது, “ஒசாமா பின்லாடனை கொன்று அல்லது உயிருடன் பிடிக்க வேண்டும்’ என, புஷ் கூறிவந்தார். இந்நிலையில், ஒசாமா கொல்லப்பட்டது தொடர்பாக புஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடரும். ஒசாமா சுட்டு கொல்லப்பட்டது மூலம், உலக நாடுகளுக்கு அமெரிக்கா செய்தி அனுப்பியுள்ளது. எவ்வளவு நாட்கள் இது தொடரும் என தெரியவில்லை. நீதி நிலை நாட்டப்படும். ஒசாமா சுட்டு கொல்லப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாதனை’ என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க செனட்டர்கள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கூறுகையில், “ஒசாமா கொல்லப்பட்டாலும், அல்-குவைதா அமைப்பும், அதனுடன் தொடர்பு உடையவர்களும் உயிரோட்டத்துடன் உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வெளியுறவு கமிட்டி செனட் உறுப்பினர் ஜான்கெரி கூறுகையில், “உலகில் அப்பாவி மக்களை கொன்று வந்த ஒசாமாவுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ளது. ஒசாமா கொல்லப்பட்டதால் மட்டும், அல்-குவைதா அமைப்பின் மிரட்டல் முடிவுக்கு வரும் என்று கருதக் கூடாது. தொடர்ந்து கண்காணிப்புடன் இருந்து, உலகை பாதுகாப்புடன் கொண்டு செல்ல வேண்டும். அமெரிக்க புலனாய்வுக்கு, ராணுவத்துக்கு, அமெரிக்க மக்களுக்கு கிடைத்த வெற்றி இது’ என்றார். பயங்கரவாதம், தடுப்பு மற்றும் வர்த்தக துணை கமிட்டி தலைவர் எட்ராய்சி கூறுகையில், “ஒசாமா கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த அமைப்பு உயிருடன் உள்ளது. நாம் சந்தோஷம் அடையும் நேரத்தில், நம் பாதுகாப்பை கைவிட்டு விட கூடாது. உலகளவில் கொல்லப்பட்ட பல பயங்கரவாதிகளில், இது மிகவும் மதிப்பு வாய்ந்தது’ என்றார். புலனாய்வுக்கான நிரந்தர தேர்வு கமிட்டி தலைவர் மைக் ரோஜர்ஸ் கூறுகையில், “ஒசாமாவை கொன்றது மூலம், அவரால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அமெரிக்க குடும்பங்களுக்கு நீதி கிடைத்துள்ளது’ என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply