ஐ.நா குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளத் தயார் : சரத் பொன்சேகா
ஐக்கிய நாடுகள் அமைப்பின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளத் தயார் என ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினால் இலங்கைப் படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கத் தயார் என குறிப்பிட்டுள்ளார். தமது தலைமையில் படையினர் மேற்கொண்ட செயற்பாடுகளின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு முகங்கொடுக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை தாம் ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மற்றும் மனித உரிமை மீறல்கள் ஒன்றும் புதிதல்ல எனவும், ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு முன்னதாகவே இந்தக் குற்றச்சாட்டுக்களை தாம் எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கத் துருப்பினரின் வினைத்திறனான செயற்பாடுகளினால் அல் கய்தா தலைவர் பின் லேடன் கொல்லப்பட்டதாகவும், அமெரிக்காவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வொஷிங்கடனில் தமக்குப் பாரிய கட்அவுட்களை அமைத்துக்கொண்டு, இராணுவத் தளபதியை ஒபாமா வீட்டுக்கு அனுப்பி வைப்பார் என தாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், தாம் கட்டளையிட்டு நடத்திய யுத்தத்தில் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை எனவும் பி.பி.சீ ஊடகத்திற்கு பொன்சேகா ஏற்கனவே தெரிவித்திருந்ததாக சுட்டிக்காட்டப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply