இந்திய வீட்டுத் திட்டம்: 16ஆம் திகதி யாழில் ஆரம்பம்!

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுத்திட்டப் பணிகள் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் 7,400 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வீட்டுத்திட்டப் பணிகளின் முன்னோடியாக புதிதாக 150 வீடுகளும், புனரமைப்பு என்ற வகையில் 2,000 வீடுகளும், புதிதாக கட்டிக்கொடுக்கும் வகையில் 5,250 வீகளும் கட்டிக்கொடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
பயனாளிகள் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட, பாதிக்கப்பட்ட, இடம்பெயர்ந்தவர்கள் என்ற அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேநேரம், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு யாழ் அரியாலைப் பகுதியில் இந்திய வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply