வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து பாதுகாப்பு செயலாளர் விளக்கம்

வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு அமைச்சினால் முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற புனர்வாழ்வு செயற்றிட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. புனர்வாழ்வு வேலைத் திட்டத்துக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணதுங்கவும் மற்றும் உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கியநாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட 30 க்கும் மேற்பட்ட இராஜதந்திரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர். இதன்போது புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம், புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தியுதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply