துரதிர்ஷ்டமான கடந்த காலத்தை மறந்து விடுங்கள் : ஜனாதிபதி

பயங்கரவாத நடவடிக்கையினால் யாழ்.குடாநாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை தனது அரசினால் மீளப்பெற்றுத்தரப்படுமென உறுதியளித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, துரதிர்ஷ்டவசமான கடந்த காலத்தை மக்கள் மறக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்வி மற்றும் கைத்தொழில் கண்காட்சியில் கலந்து கொண்ட மக்களுக்கு செய்மதி மூலம் ஆற்றிய உரையின்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

அவ்வுரையில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்;

கடந்த காலத்தின் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளை நாம் மறப்பதற்கு இதுவே உரிய தருணம் ஆகும். யாழ்.மற்றும் வடபகுதி மக்கள் கடந்த காலத்தில் இழந்தவற்றை மீளப் பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.

பயங்கரவாத நடவடிக்கைகளினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் அனைத்தும் மீளப்பெற்றுத் தரப்படும்.

வடக்கில் தற்போது நிலவும் சூழ்நிலை நீண்டகாலத்துக்கு நீடிக்கப்போவதில்லை. கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள சகோதர, சகோதரிகளுக்கும் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது போன்ற விடிவுகாலம் விரைவில் கிடைக்கும்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் வெகு விரைவில் போராளிகளின் பிடியிலிருந்து அரச படைகளால் வெகுவிரைவில் மீட்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மொழியில் உரையாற்றியது இதுவே முதற்தடவையென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply