இலங்கைகான மனிதாபிமான உதவிகளை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் அதிகரித்துள்ளது
இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளை மேலும் பத்து மில்லியன் யூரோக்களினால் அதிகரிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இடம்பெயர் மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கும் நோக்கில் இந்த உதவி அதிகரிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர் மக்கள் மீள் குடியேறுவதற்கும் வசதிகளை மேம்படுத்திக் கொள்வதற்கும் இந்த உதவிகள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் மற்றும் வருட ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோருக்கும் மேலதிக நிதி ஒதுக்கீட்டின் மூலம் நன்மைகள் வழங்கப்படவுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பக்கச்சார்பற்ற வகையில் ஐரோப்பா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என ஒன்றியத்தின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான ஆணையாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்ததனைத் தொடர்ந்து அதிகளாவன இடம்பெயர் மக்கள் சொந்த இடங்களில் மீள் குடியேறியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும், 75000 அகதிகள் தொடர்ந்தும் இந்தியாவில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply