எங்கள் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி தயாராக உள்ளார் தமிழ்த் தலைவர்கள் தயாராக இல்லை : டக்ளஸ்

தருஸ்மன் அறிக்கையைப் பயன்படுத்தி அரசை அழிக்க வாக்கு வேட்டையாடச் சிலர் முயன்று வருகின்றனர். இந்த அரசியல்வாதிகளின் கொள்கை சவப்பெட்டிக்கடைக்காரனின் கொள்கை போன்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி யின் யாழ். அலுவலகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை மக்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் ஒத்துழைத்தால் தான் அரசினால் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வை எட்டக்கூடியதாக இருக்கும். இன்று அனேகமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. அரசியல் பிரச்சினைக்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.பிரேமதாசா, சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்கா, ராஜபக்ஷ இவர்களுடன் பேசி அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய சந்தர்ப்பங்களைத் தமிழர்கள் தவறவிட்டு விட்டார்கள். திரும்பவும் அந்தச் சந்தர்ப்பம் இடைத்துள்ளது. எங்கள் பிரச்சினைகளை நாங்கள்தான் தீர்க்க வேண்டும். அதற்கு ஜனாதிபதி தயாராக உள்ளார். தமிழ்த் தலைவர்கள் தயாராக இல்லை.

ஜேர்மனி அழிக்கப்பட்டதை உணர்ந்த அந்த மக்கள் அமெரிக்காவுடன் கைகோர்த்ததால் தான் ஜேர்மனி முன்னேறியது. அதேபோல்தான் ஜப்பானும். நாங்கள் இலங்கை அரசுடன் முரண்பட்டுப் பழிவாங்க வேண்டும் என நினைத்தால் மீண்டும் அழிவுதான் ஏற்படும்.முப்பது வருட சாத்வீகப் போராட்டம், அதன் பின்னர் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் என்பவற்றால் எமக்கு என்ன கிடைத்தது. விடுதலைப் போராட்டத்துக்கு ஒரு தேவை இருந்தது. அதை இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முடிந்திருக்கவேண்டும். அது மீறிப் போனதில் பல துயரங்களைச் சந்திக்க வேண்டியேற்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தம் முறையாகச் செயற்படுத்தப்பட்டிருந்தால் சரியான தீர்வைப் பெற்றிருக்க முடியும்.13 ஆவது திருத்தச் சட்டம் ஓர் ஆரம்ப நடைமுறைக்கானது. அது முதலில் நடை முறைப்படுத்தப்படுமாயின் வேறு பிரச் சினைகள் இருக்கா  எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply