பொதுமக்களுக்கு எவ்வித தீங்கும் இழைக்காத வகையிலேயே பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது : பாலித கொஹன
பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கை அரசாங்கம் பொதுமக்களுக்கு தீங்கிழைக்காத வகையில் பயங்கரவாதத்தை இலங்கையிலிருந்து பூண்டோடு அழித்து விட்டதென்று ஐ.நா. சபைக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹன ஐ.நா பாதுகாப்புச் சபையில் கூறியுள்ளார். நியூயோர்க்கில் பாதுகாப்புச் சபையின் விவாதத்தில் செவ்வாயன்று கலந்துகொண்ட அவர், சிவிலியன்களை இலக்குவைத்து படையினர் ஒருபோதும் யுத்தம் நடத்தவில்லை. 30 வருடங்களாக சிவிலியன்கள் பாதிக்கப்படாத வகையிலேயே படையினர் யுத்தத்தை நடத்தி வந்ததோடு இறுதியில் பயங்கரவாதத்தை முறியடிக்க முடிந்ததெனக் கூறினார்.
இலங்கையில் பயங்கரவாதிக ளுக்கு எதிரான யுத்தம் வெற்றிகரமாக நிறைவு பெறுவதற்கு முன்னர் இத்தகைய யுத்தக்குற்றச்சாட்டுகள் இலங்கை இராணுவ த்தின் மீது சுமத்தப்பட வில்லை என்றும் அவர் கூறினார்.
பயங்கரவாதிகள் படுதோல்வி அடைவது உறுதியானதையடுத்து எல்.ரி.ரி.ஈ. இன் ஆதரவாளர்கள் தங்கள் பணப்பலத்தைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆதாரமற்ற போலிக் குற்றச்சாட்டுகளை கற்பனையில் உருவாக்கி நாட்டின் நற்பெயருக்கு தீங்கிழைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக டாக்டர் பாலித கொஹன தெரிவித்தார்.
இன்று உலகின் பெரும்பாலான முரண்பாடுகளும், ஆயுதப்போராட்டங்களும் அரசாங்கங்களுக்கும், அரசாங்கத்திற்கு தொடர்பற்ற ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கு மிடையே நடைபெறுவதுண்டு என்று சுட்டிக்காட்டிய அவர், உள்ளூரில் இடம்பெற்ற இந்த ஆயுதப் போராட்டத்தில் இலங்கை அரசாங்கம் நாட்டு மக்களை இந்த யுத்தத்தின் போது பாதுகாக்கும் அதே வேளையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தை மேற்கொள்ள வேண்டிய சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது என்று கூறினார்.
ஈவிரக்கமற்ற கொடிய பயங்கரவாத இயக்கமான எல்.ரி.ரி.ஈயுடன் யுத்தத்தில் மூழ்கியிருந்த போதிலும் எமது இலங்கை இராணுவத்தினர் பொதுமக்களுக்கு உயிராபத்து ஏற்படாத வகையில் அவதானமாக யுத்தத்தை நடத்தினார்கள் என்று கூறினார்.
இலங்கையில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் தமிழ் பொதுமக்களை தங்களின் இராணுவ செயற்திறனுக்கு பயன்படுத்தினார்கள் என்று தெரிவித்த டாக்டர் பாலித கொஹன, பொது மக்களுக்கு ஆயுதப் பயிற்சியை அளித்து பொதுமக்களை போர் முனைக்கு அனுப்பி, அவர்களை மரணிக்கச் செய்யும் கொடிய செயல்களில் இந்தப் பயங்கரவாதிகள் ஈடுபட்டார்கள்.
சிறு பிள்ளைகளை போர்வீரர்களாக பயன்படுத்திய கொடுமையுடன் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொது மக்களை எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் தங்கள் பாதுகாப்பு கேடயங்களாகவும், பணயக் கைதிகளாகவும் பயன்படுத்தி பொதுமக்களை மரணிக்கச் செய்தார்கள் என்று கூறினார்.
இந்த பயங்கரவாதிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்திய காரணத்தினால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியமையால் இலங்கை இராணுவத்தினர் மிகவும் அவதானமாக யுத்தத்தை நடத்தினா ர்கள்.
இந்த யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை பூஜ்ஜிய நிலையில் இருக்கிறது என்று தெரிவித்த அவர், இலங்கையின் படை வீரர்கள் பொதுமக்கள் யார், ஆயுதப் போராளிகள் யார் என்று அடையாளம் கண்ட பின்னரே யுத்தத்தை நடத்தினார்கள்.
இதன்மூலம் யுத்தம் முடிவடையும் காலகட்டத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் பொதுமக்களை அரசாங்கம் மீட்டெடுத்துள்ளதாகவும் தமதுரையில் பாலித கொஹன மேலும் கூறினார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply