தமிழ் மக்களின் உரிமைகளை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் : ஐரோப்பிய ஒன்றியம்

தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்டுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.நிபுணர் குழு அறிக்கையின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இலங்கைத் தமிழ் மக்களின் நிலைமைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நேற்று அவசர விவாதம் நடத்தப்பட்டது. தமிழ் மக்கள் மத்தியில் பிரகாசமானதும், சுபீட்சமானதுமான ஓர் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய வகையில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்குமாறு ஐரோப்பிய பாராளுமன்றம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் உள்நாட்டு பொறிமுறை சர்வதேச தரத்திற்கு நிகரான வகையில் மேம்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்கள் இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகளை நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply