இனிவரும் காலங்களில் அரசுடனான பேச்சுக்கள் கடினமானதாகவே இருக்கும் : TNA

இரு தரப்பினருக்கும் இடையில் நேற்று மீண்டும் நடைபெற்ற பேச்சுக்களின் போது இந்த விடயம் தம்மால் அரச தரப்புக்கு எடுத்துக் கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை நடந்த பேச்சுக்களில் உறுதியளிக்கப்பட்ட விடயங்கள் எவற்றையும் அரசு நடைமுறைப்படுத்தவில்லை. ஒருபுறத்தில் அரசு எம்முடன் பேசுகின்ற அதேநேரம் வடக்கு கிழக்கில் மக்களின் காணிகள் அரச படைகளால் அபகரிக்கப்படுகின்றன. இத்தகைய நிலைமை தொடருமானால் இனி இடம்பெறும் பேச்சுக்கள் கடினமானவையாகவே இருக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறோம் என்றார் சுரேஸ் பிரேமச்சந்திரன். நேற்றைய பேச்சுக்களில் வடக்கு கிழக்கில் தற்போது இடம்பெற்று வரும் சம்பவங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது எனவும் அவர் கூறினார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களில் பலர் இன்னும் மீளக்குடியமர்த்தப்படாதிருக்கும் நிலை பற்றியும் பேச்சுக்களில் ஆராயப்பட்டுள்ளது.
 
அதிகாரப் பகிர்வு தொடர்பில் சுதந்திரக் கட்சி தனது கூட்டமைப்பில் இருக்கும் ஏனைய கட்சிகளுடன் பேசி தீர்க்கமான முடிவு ஒன்றுக்கு இன்னும் வரவில்லை என்று நேற்றைய சந்திப்பில் அரச தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டப் பேச்சில் அது பற்றிய அரசின் முடிவு தெரிவிக்கப்படும் என்று அரச தரப்புப் பிரதிநிதிகள் தெரிவித்தனர் என்று சுரேஷ் கூறினார்.
 
நேற்றைய பேச்சுக்களின் போது தடுப்பில் உள்ள புலிச் சந்தேகநபர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றைக் கூட்டமைப்பு அரசிடம் கையளித்துள்ளது. நேற்றைய பேச்சில் அரச தரப்பில் அமைச்சர்கள் ஜி.எல்.பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ரவீவ விஜேயசிங்க ஆகியோரும் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அடுத்த பேச்சு ஜுன் மாதம் 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply