தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கிறது; தி.மு.க., அமைச்சர்கள் பலர் தோல்வி

தமிழ் நாட்டில் அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கிறது. இதுவரை முன்னணி நி‌லவரம்தான் வந்து கொண்டிருக்கிறது என்றாலும் அ.‌தி.முக., 198 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தி.மு.க., 36 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மேலும் தி.மு.க., அமைச்சர்களான பொங்கலூர் பழனிச்சாமி, வீரபாண்டி ஆறுமுகம், தமிழரசி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உட்பட பலர் தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளனர். எனவே தேர்தல் முடிவு அ.தி.முக.,வுக்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குவங்கத்ததில் திரிணாமுல்காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணியினர் 205 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். இடதுசாரி கட்சியினர் 67 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். புதுச்சேரி யூனியனில் இன்று காலை ஓட்டு எண்ணும் பணி துவங்கியது முதல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி பின்னடைந்துள்ளது. என்.ஆர்., காங்கிரஸ் அ.தி,மு.க., கூட்டணி 7 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

கேரளாவில் .காங்கிரஸ் 73 இடங்களிலும், ஆளும் இடதூரி கூட்டணியினர் 66 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.அசாமில் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களிலும், அசாம் கனபரிஷத் 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பா.ஜ., 8 வது இடங்களிலும், முன்னிலை வகிக்கிறது.

மாலை 5 மணிக்குள் முழு முடிவுகள் நிலவரம் தெரி்ந்து விடும். முடிவுகளை வாசகர்கள் நிமிடத்துக்கு நிமிடம் தெரிந்து கொள்ளும் வகையில் தினமலர் இணையதளம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

வாசகர்களின் வசதிக்காக அவ்வப்போது உரிய மாற்றங்களைச் செய்து புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி வரும் தினமலர் இணையதளம் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் வழங்கி சாதனை படைத்தது போலவே சட்டசபை தேர்தல் முடிவுகளையும் உடனுக்குடன் வெளியிட உள்ளது. இதற்காக 500 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் 234 தொகுதிகளிலும் பணியாற்ற உள்ளனர்.

ஒவ்வொரு சுற்று முடிவிலும் தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெறும் வாக்குகள், கட்சிகளின் முன்னணி நிலவரம், கூட்டணிகளின் முன்னணி நிலவரம், வெற்றி – தோல்வி விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்காக சிறப்பான வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 8 மணி முதல் நிமிடத்திற்கு நிமிடம் 234 தொகுதி நிலவரமும் வெளியிடப்படும். அனைத்து தொகுதிகளின் முடிவுகள் வெளியாகும் வரை தொடர்ந்து முன்னணி நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இதேபோல தேர்தல் நடந்த பிற மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளையும்  உடனுக்குடன் வெளியிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply