மே 15ஆம் திகதி பதவியேற்பு விழா: 3ஆவது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா


நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 147 இடங்களுக்கும் அதிகமாகப் பிடித்து தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எதிர்வரும் 15ஆம் திகதி முதல்வராகப் பதவியேற்கிறார். அவரது பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த மூத்த பொலிஸ் அதிகாரிகள் இன்று ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதன்போது 15ஆம் திகதி ஆளுநர் மாளிகையிலேயே பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். இதையடுத்து அன்றைய தினம் சென்னை கிண்டி ராஜ்பவனில் ஜெயலலிதா பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அவருக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் சிலரும் பதவியேற்பர் என்று தெரிகிறது. மே 16ம் திகதி தற்காலிக சபாநாயகர் தேர்வும், அன்றைய தினமே எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பும் நடக்கும் என்று தெரிகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply