ஐ.நா. நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கவிடாது அரசு துரோகமிழைக்கிறது : சரத் பொன்சேகா
ஐ. நா. நிபுணர் குழுவின் இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் போலியானவை. ஆனால் அக்குற்றச்சாட்டுகளுக்கு என்னை பதிலளிக்க விடாது அரசாங்கம் நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக் கொடுக்கின்றது என்று முன்னாள் இரா ணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்ட ணியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்தார். நாட்டை பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்து இருந்து மீட்டெடுத்த இராணுவத்திற்கு நன்றிக்கடன் செலுத்தும் வழிமுறை இதுவல்ல. எனது சுகவீனம் தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு 2 இல் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு சரத்பொன்சேகா சிறைச்சாலை அதிகாரிகளால் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். இதன் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சரத்பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.
இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சளியினால் இருமல் சற்று அதிகமாகியுள்ளது. எனவே எனது நோய் தொடர்பில் மக்கள் பயப்பட தேவையில்லை. இன்று நாடு போர்க்குற்ற அச்சுறுத்தலில் உள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் போலியான போதிலும் அதனை நிரூபிக்க முடியாமல் அரசாங்கம் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் இலங்கைக்கு எதிராக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுகளுக்கு என்னாலேயே உரிய முறையில் பதிலளிக்க முடியும்.
ஆனால் அரசாங்கம் என்னை சிறையிலிட்டு நாட்டிற்கும் இலங்கை இராணுத்திற்கும் துரோகத்தனம் செய்து வருகின்றது. அது மட்டுமன்றி எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் என்னையும் சுட்டிக்காட்டி போலி பிரசாரங்களையும் செய்து வருகின்றது.
உயிர்த் தியாகம் செய்து நாட்டை பாதுகாக்கின்ற இராணுவ வீரர்களை காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையாகவே அரசின் செயற்பாடுகள் உள்ளன எனக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply