அ.தி.மு.க. அரசுடன் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாகப் பேச்சு நடத்துவோம் : மாவை

தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் ஜெயலலிதாவின் அ.தி.மு.க.  அரசுடன் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாகப் பேச்சு நடத்தி இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படி வலியுறுத்துவோம் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாகவும், அவர்களுடைய அரசியல் தீர்வு குறித்தும் ஆட்சிக்கு வந்துள்ள அ.தி.மு.கவுடன் நாங்கள் நேரடியான பேச்சுகளை நடத்துவோம். ஏனெனில், தமிழகத் தேர்தல் பிரசாரங்களின்போது ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தார்கள்.

எனவே, அதன் அடிப்படையில் ஆட்சி பீடம் ஏறும் அ.தி.மு.கவுடன் பேச்சுகளை நடத்தி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுக் கொடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படி வலியுறுத்துவோம் . ஈழத்தமிழர்கள் அனுபவித்த துயரங்கள், வேதனைகளை விலாவாரியாக அறிந்துகொண்டுள்ள ஜெயலலிதா அரசியல தீர்வு குறித்து இந்திய அரசுக்கு அழுத்தம கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை எனவும் மாவை சேனாதிராஜா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply