ஏனைய மாவட்டங்களைப் போன்று யாழ்ப்பாணத்துக்கும் அரச நிதி கிடைக்கிறதா? அரச அதிபரிடம் வினவினார் ஈராக் தூதுவர்
ஏனைய மாவட்டங்களைப் போன்று யாழ். மாவட்டத்துக்கும் அரசின் நிதிப் பங்கீடு பாரபட்ச மின்றிக் கிடைக்கின்றதா? என்று நேற்று முன்தினம் யாழ். வந்த ஈராக் தூதுவர் காட்டன் ராஹா கிளவ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரிடம் வினவினார். யாழ். செயலகத்துக்கு நேற்று முன்தினம் பிற்பகல் வருகைதந்த ஈராக் தூதுவர் சுமார் 2 மணிநேரம் யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து அரச அதிபருடன் கலந்துரையாடினார்.யாழ். மாவட்டத்தின் தேவைக்கும் அபிவிருத்திக்கும் என அரசால் ஒதுக்கப்படும் நிதி ஏனைய மாவட்டங்களுக்கு ஒதுக்கப்படுவது போல பாரபட்சமின்றிக் கிடைக்கின்றதா என்பதையும் அவர் கேட்டறிந்தார்.இந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர பாக அரச அதிபர் தெரிவித்தவை வருமாறு:
யாழ். மாவட்டத்தின் நிர்வாகப் படிமுறைக் கட்டமைப்புகள் மீளக் குடியமர்ந்த மற்றும் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திக் கும் மனிதாபிமான தேவைகளுக் கும் உதவும் நாடுகளின் திட்டங் களின் தற்போதைய நிலைமை, யாழ். மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அரச சார்பற்ற நிறுவனங்கள், ஐ.நா. முகவர் நிறுவனங்களின் பணிகள் மற்றும் நிறுவனங் களின் விவரம், மக்களின் பாதுகாப்பு விடயங்கள் என்பன குறித்து இதில் கலந்துரையாடப் பட்டது. அத்துடன் குவைத் நாட்டு அரசால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் உதவித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது. யாழ்.மாவட்டத்தில் மக்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்திசெய்ய மேலும் 37 ஆயிரம் வீடுகள் தேவையாக உள்ளன என்பது குறித்து ஈராக் தூதுவரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply