தமிழக அமைச்சரவையில் புது முகங்கள்

அஇஅதிமுக தலைவர் ஜெயலலிதா திங்கட்கிழமையன்று மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கிறார். இந்த சமயத்தில் மாநிலத்தை மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு வருவது மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது முக்கிய பணியாக இருக்கும் என்று ஜெயலலிதா கூறினார். திங்கட்கிழமையன்று அமைச்சர்களாக பதவியேற்பவர்கள் குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவையும் சேர்த்து 34 பேர் அமைச்சரவையில் பங்கேற்கின்றனர். கோகுல இந்திரா மற்றும் செல்வி ராமஜெயம் ஆகிய இரு பெண் உறுப்பினர்கள் அமைச்சர்களாகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நிதித்துறை அமைச்சராகவும், கே.ஏ. செங்கோட்டையன் விவசாயத்துறை அமைச்சராகவும், நத்தம் ஆர். விசுவநாதன் மின்சாரத்துறை அமைச்சராகவும், கே.பி.முனுசாமி உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், சி.வி.சண்முகம் பள்ளிகல்வித்துறை அமைச்சராகவும், சி.சண்முகவேலு தொழில்துறை அமைச்சராகவும் பதவியேற்கின்றனர்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்ற பலர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply