2600 கைதிகள் இன்று விடுதலை களனி விகாரையில் பிரதமர் தலைமையில் தேசிய நிகழ்வு
2600 ஆவது சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு 800 சிறைக்கைதிகளை களனி விகாரையில் நடைபெறும் சமய அனுஷ்டானத்தைத் தொடர்ந்து விடுதலை செய்யும் தேசிய நிகழ்வொன்று இன்று பிரதமர் தி. மு. ஜயரத்ன தலைமையில் நடைபெறும். 2600 வது சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு 2600 கைதிகளை விடுதலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஏனைய சிறைகைதிகள் சிறைச்சாலைக்கு அருகிலுள்ள விகாரைகளில் வைத்து விடுதலை செய்யப்படுவார்களென்று புனரமைப்பு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. தஸநாயக்க தெரிவித்தார்.
பொது மன்னிப்புக்காக 75 வயதிற்கு மேற்பட்டவர்களும் சிறு குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்டவர்களும் தெரிவு வெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
களுத்துறை சிறைச்சாலையில் மகளிர் மற்றும் சிறுவர் திறந்தவெளி சிறைச்சாலை யொன்றும் நேற்றுக் காலை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
இங்கு பெண் கைதிகளுக்கு ஐந்து வயதிற்கு குறைந்த பிள்ளைகளுடன் சுதந்திரமாக இருக்கலாமெனவும் அவர் தெரிவித்தார். 80 பெண் கைதிகளுக்கு தங்கள் பிள்ளையுடன் இந்த திறந்தவெளி சிறைச்சாலையில் இருக்கலாமென்றும் அங்கு கடமையாற்றும் பாதுகாவலர்கள் காக்கி சீருடைக்கு பதிலாக பொதுவான உடைகளே அணித்திருப்பீர். சிறுவர் விளையாட்டு மைதனம், சிறுவர் பாடசாலை ஆகியவற்றுடன் முழுமையான சிறுவர் சூழலைக் கொண்ட கட்டமைப்பு இங்குள்ளதெனவும் செயலாளர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply