இன்னும் 3 கிலோமீற்றர் படையினர் பின்வாங்கியிருந்தால் வெற்றியை இழந்திருப்போம்: பொன்சேகா

எனது கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில் 2009 ஜனவரி 31 ஆம் திகதி முதல் பெப்ரவரி இரண்டாம் திகதி வரை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தமையினால் ஒரே தடவையில் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாமல் போனது. அதன் பெறுபேறாக 4 கிலோமீற்றர் படையினர் பின்வாங்கினர். அங்கு இன்னும் 3 கிலோமீற்றர் பின்வாங்கியிருந்தால் 1999 ஆம் ஆண்டு மாங்குளத்தில் வீழ்ச்சி கண்டது போல, 25 மாதத்தில் நாம் பெற்ற சகல வெற்றிகளையும் தனி நபரின் தீர்மானத்தினால் இழந்திருப்போம் என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.

இராணுவத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கெத்தாராம விளையாட்டரங்கில் 2000 படையினர் பயிற்சியில் ஈடுபட்டபோது அதனை மேற்பார்வையிடுவதற்கு 2009 ஒக்டோபர் 15 ஆம் திகதி சென்றிருந்தேன். அப்போது இந்திய தூதுவரை அழைத்த ஜனாதிபதி நான் இராணுவ புரட்சியில் அரசாங்கத்தை கவிழ்க்கப்போவதாகவும் அதுதொடர்பில் இந்தியாவிற்கு அறிவிக்குமாறும் எடுத்துகூறியுள்ளார். இதனால் நான் வியப்படைந்தேன் என்றும் அவர் சொன்னார்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி. வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையிலேயே இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply