‘விடுதலைப் புலிகள் என்னையும் கொல்ல திட்டமிட்டனர்: தொடர்ந்தும் உயிருக்கு அச்சுறுத்தல்’
சந்தர்ப்பம் கிடைத்தால் என்னையும் கொல்வதற்கு புலிகள் திட்டமிட்டதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தலைவர் கூறியுள்ளார் என தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்ததாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்:- 1991-ல் இருந்தே உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள சூழ்நிலையில்தான் இருக்கிறேன். இது ஒன்றும் புதிதல்ல.பிரான்சில் கைதான தீவிரவாதிகளில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறித்து தமிழக அரசுக்கு இன்னும் மத்திய அரசிடமிருந்து தகவல் எதுவும் வரவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றி மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply