யாழ்ப்பாணத்தை சர்வாதிகாரமாக அடக்கியாள முற்படுகிறார் டக்ளஸ்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தை தனது சர்வாதிகாரப் பிடிக்குள் வைத்துக் கொண்டு அடக்கியாள முற்படுவதாக பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹ_ல் குற்றம் சாட்டுகின்றார். முன்னொரு காலத்தில் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை எவ்வாறு அடக்கியாள முற்பட்டார்களோ அதேவழியிலேயே டக்ளஸ் தேவானந்தாவும் சர்வாதிகாரமாக நடந்து கொள்ள முற்படுகின்றார் என்றும் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹ_ல் மேலும் தெரிவித்துள்ளார்.சிங்களப் பத்திரிகையான லக்பிமவுக்கு வழங்கிய நேர் காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கவுன்சிலுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட 25 பேரில் 13 பேர் டக்ளஸ் தேவானந்தாவால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அதேபோன்று யாழ்.பல்கலைக்கழக கவுன்சில் கூட்டம் நடைபெற முன்பாக டக்ளஸினால் ஒரு அதன் உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தப்படும்.

பல்கலைக்கழக கவுன்சில் கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான கட்டளைகள் அங்கு வழங்கப்பட்டு விடும். துணைவேந்தர் தெரிவில் யாருக்கு வாக்களிப்பது போன்ற முடிவுகள் உட்பட எல்லா முடிவுகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டு விடும். துணைவேந்தரைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது அவருக்கு அவசியமாக உள்ளது. இதனால் எனது நியமனத்தை அவர் விரும்பவில்லை. கிறிஸ்தவனான என்னை துணைவேந்தராக நியமித்தால் இந்துக்கள் கோபம் கொள்வார்கள் என அவர் ஜனாதிபதிக்குச் சொல்லி இருக்கிறார். இதனால் எனக்கு அவர்கள் ஆதரவு தெரிவிப்பதாக முக்கியமான இந்துத் தலைவர்களிடம் அறிக்கை பெற்று வருமாறு கோரப்பட்டேன். பெரும்பாலான இந்துக்கள் நான் துணைவேந்தராக வருவதையே விரும்புகிறார்கள். ஜனாதிபதிக்கு டக்ளஸ் அவ்வாறு சொன்னதன் ஊடாக அவர்களை அவர் அவமானப்படுத்தி இருக்கிறார்.

தேவானந்தாவுக்கு வேண்டியவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அப்பதவிகளுக்கான எத்தகைய விண்ணப்பங்களும் பகிரங்கமாகக் கோரப்பட்டதில்லை. அந்த நியமனங்களில் எத்தகைய ஒழுங்கும் கடைப்பிடிக்கப்படவுமில்லை.அதேபோன்று தான் பல் கலைக்கழகத்துக்கான விடுதி கள் கட்டுவது தொடர்பான 300 மில்லியன் ரூபாய் பெறுமதி யான கட்டட ஒப்பந்தமும் சட்டத் துக்குப் புறம்பான வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.குறிப்பாக அண்மைய கொள்ளைகளுக்கும் கொலைகளுக்கும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களே பொறுப்பு என மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்ருசிங்க கூறியதன் பின்பு இந்த முறைகேடுகள் தொடர்பாக எங்காவது முறையிட மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சுயாதீனத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய மூலங்களில்லை. தமிழ் மக்களோடு தொடர்பு கொள்வதென்றால் ஜனாதிபதி தேவானந்தாவை விட்டுவிட்டு தேர்தல்ள் மூலம் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைவர்களுடன் அவர் பேச வேண்டும்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கான வாக்களிப்பில் முதல் மூவருள் ஒரு வராக நான் தெரிவு செய்யப்பட்டேன். முன்னதாக இருந்த துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு மூன்று நாள்களுக்கு முன்னதாக ஜனாதிபதி யால் நானும் எனது மனைவியும் அலரி மாளிகைக்கு தேநீர் விருந்தொன்றுக்கு அழைக்கப்பட்டோம். யாழ் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு என்னை நியமிப்பதற்கான நியமனக் கடிதம் மறுநாள் காலை ஜனாதிபதிச் செயலகத்திலிருந்து அனுப்பப்படும் என்ற உறுதி மொழியுடன் நாங்கள் விடைபெற்றோம்.

ஆனால் பின்னர் அவ்வாறு நடைபெறவில்லை. டக்ளஸ் தேவானந்தாவின் எதிர்ப்புக்காரணமாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை மீறி விட்டார் என்றும் பேராசிரியர் ஹ_ல் தனது நேர்காணலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply