பயங்கரவாதம் மீள தலைதூக்குவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படக் கூடாது : ஜனாதிபதி

பயங்கரவாதம் மீள தலைதூக்குவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் மீண்டும் பிரிவினைவாதத்திற்கு சந்தர்ப்பம் வழங்காமையின் ஊடாக படைவீரர்களுக்கு கௌவரமளிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தாய் நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக அதீதமான தியாகங்களை மேற்கொண்ட படைவீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமாதானம் தொடர்பான நீண்ட நாள் கனவு தற்போது மெய்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு;ள்ளார். நாட்டில் சமாதானம் நிலை நாட்டியமைக்கான முழு கௌரவமும் படைவீரர்களையேச் சாரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உயிர்களையும், உடற்பாகங்களையும் தாய் நாட்டுக்காக தியாகம் செய்த படைவீரர்களுக்கு சிரம் தாழ்த்தி மரியாதை செய்ய வேண்டியது எமது கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் ஈட்டப்பட்ட இந்த யுத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு சந்தர்ப்பம் வழங்காமையே படைவீரர்களுக்கு அளிக்கக் கூடிய மிகப் பெரிய மரியாதையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் உயிர் நீத்த அல்லது காயமடைந்த சகல படைவீரர்களின் குடும்பங்களும் நாம் அனைவரும் உதவிகளை வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். படைவீரர் குடும்பங்களை மக்களும் அரசாங்கமும் பாதுகாக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply