கொழும்பில் கோலாகலமாக நடைபெறும் இரண்டாவது யுத்த வெற்றி விழா கொண்டாட்டம்
இரண்டாவது யுத்த வெற்றி விழா கொண்டாட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்த வெற்றி விழா கொண்டாட்டத்தில் 108 அதிகாரிகளை உள்ளடக்கிய 8 ஆயிரத்து 927 படைவீரர்களின் அணிவகுப்பும் இடம்பெறுகின்றது. முப்படைகளினதும் விசேட சாகாச நிகழ்ச்சிகளும் இந்த நிகழ்வில் இடம்பெறுகின்றது. வெற்றிவிழா கொண்டாட்டத்தையடுத்து கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் அரசாங்க அலவலகங்கள் இன்று மூடப்பட்டுள்ளது.
வெற்றிவிழா இடம்பெறும் காலிமுகத்திடலுக்கு அருகிலுள்ள வீதிகள் இன்று காலை போக்குவரத்துக்காக மூடப்படவுள்ளதுடன் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெற்றிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பெரும் தொகையான பொலிஸாரும் இராணுவத்தினரும் தலைநகர் கொழும்பில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply