நாட்டுக்கு எதிரான அந்நிய அழுத்தங்களை தோற்கடிப்பதற்கு ஐ.தே.க. முன்னிற்கும் : சஜித்
தாய்நாட்டை மீட்டெடுத்த எமது இராணுவ வீரர்களை எந்த சந்தர்ப்பத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் தனிமைப்படுத்த விடப் போவதில்லை எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச எம். பி. நாட்டுக்கும் இராணுவ வீரர்களுக்கும் எழுந்துள்ள அந்நிய சக்திகளின் அழுத்தங்களைத் தோற்கடிக்க ஐ. தே. க. முன்னிற்கும் என்றும் கூறினார். சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை நிபந்தனைகளற்ற வகையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுடன் நாட்டைக் கட்டியெழுப்பும் அபிவிருத்திப் பயணத்தில் அவரையும் ஒரு பங்குதாரராக இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயவாக கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறைப்படுத்தப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் எம். பிக்களான சுஜீவ சேனசிங்க, தலதா அத்துக் கோரள மற்றும் தினேஷ் சங்கந்த ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே சஜித் பிரெமதாச எம். பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply