தமிழீழம் அமைய ஐநா வாக்கெடுப்பு நடத்த வேண்டும் : கொளத்தூர் மணி
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டிப்பதும், அதற்கு காரணமானவர்களை தண்டிப்பதும் மட்டுமே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு தீர்வாக அமைந்து விடாது, இலங்கையை இனப்படுகொலை நாடு என்று அறிவிக்க வேண்டும். தனி தமிழீழத்தை நிறுவுவதற்கான பொது வாக்கெடுப்பை ஐ.நா மன்றம் உடனடியாக நடத்த வேண்டும் என்று பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஐ.நா நியமித்த, நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளில் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வந்ததை மறுபரிசீலனை செய்யவேண்டும், இறுதிக்கட்ட போரின்போது ஐ.நா மன்றத்தின் தலைமையகத்தில் நடந்த குளறுபடிகளை (விஜய் நம்பியாரும், அவரது தம்பி சதீஷ் நம்பியாரும் நிகழ்த்திய) விசாரிக்க வேண்டும். என்ற நிபுணர் குழுவின் பரிந்துரைகளை சர்வதேச நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று அறிக்கை சுட்டிக்காட்டாதது வருத்தமளிப்பதாக கூறினார். எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடக்க இருக்கும், ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் இலங்கை புரிந்துள்ள போர்க்குற்றங்கள் பற்றி விவாதித்து, சர்வதேச விசாரணை கமிஷன் அமைக்க வழி செய்ய வேண்டும் என அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply