புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் சக்தி குறைந்து விட்டது : விமல்

புலம்பெயர் விடுதலைப் புலிகளுக்கு சொல்லிக் கொள்ளும்படியான ஆற்றல் எதுவும் இல்லையென்றும் அவர்களை எளிதாக அடக்கிவிட முடியும் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார். சிங்கள இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே அமைச்சர் விமல் வீரவன்ஸ புலம்பெயர் விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் சார்பு நிலை அமைப்புகள் குறித்து மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் நாடுகளில் செயற்படும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் மிகமிகக் குறைந்த அதிகாரம் மற்றும் ஆற்றல்களையே கொண்டிருப்பதாகவும், அதனையும் படிப்படியாக இல்லாதொழித்து விட முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அமெரிக்காவின் ஐ.நா. முன்றலில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மிகக்குறைவானவர்களே கலந்து கொண்டனர். அவர்களும் கனடாவில் இருந்தே கொண்டுவரப்பட்டவர்கள்.

இதை பார்க்கும் போது புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் சக்தி குறைந்து கொண்டு போவதையே எடுத்துக் காட்டுகின்றது. அதன் காரணமாக அவர்களை இலகுவாக அடக்கி விடலாம் என்பதை உறுதியாகக் கூற முடியும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply