அம்னெஸ்டிக்கு வயது 50
மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் எனப்படும் சர்வதேச பொதுமன்னிப்பு சபை இன்று சனிக்கிழமை தனது ஐம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளது. பீட்டர் பெனென்சன் என்ற பிரிட்டிஷ் வழக்குரைஞரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும், சித்ரவதை மற்றும் மரண தண்டனைக்கு எதிராகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்துள்ளது.
அம்னெஸ்டி இண்டர்நேஷனல் 28 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் இவ்வமைப்புக்கு ஆதரவாளர்கள் உள்ளனர்.
லண்டனில் உள்ள இவ்வமைப்பின் தலைமையகத்தில் முந்நூறுக்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர்.
அண்மைய காலமாக மக்களின் பொருளாதர மற்றும் சமூக உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் இந்த அமைப்பு பிரச்சாரம் செய்திருந்தது.
இவ்வாறு தம் பிரச்சாரத்தை விரிவு படுத்தியதன் மூலம் தம்முடைய லட்சிய நோக்கிலான கவனம் சிதறுவதற்கு இவ்வமைப்பு இடம்தந்துள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply